அன்புக்கு நான் அடிமை
உண்மையான அன்புக்கு உயிரை கொடுப்பான் இவன் ....(புருஸ்....)
Tuesday, 26 July 2016
Sunday, 20 November 2011
தமிழுக்கு வந்த சோதனை ....
பல் விழுந்த கிழவியும் பஸ்சுன்னு சொல்லுது...
பள்ளி போகும் பிள்ளையும் மிஷ்சுன்னு சொல்லுது..
ஆங்கில மோகம் ஆட்டி வைக்குது..
தமிழ் இப்போ தவிச்சி நிக்குது..
தமிழ் என்பதை ஆங்கிலத்தில் எழுதுகிறோம்..
நம் மொழிக்கு இரங்கல் பாட்டு பாடுகிறோம்...
இவ்வளவு சொல்லியும் எனக்கு நன்றியா சொல்ல போகிரீர்கள்.. தேங்க்ஸ் தானே ......
Thursday, 20 October 2011
காதலிக்கு ஒரு கவிதை .....
அடியே எருமை
உனக்கு புரியவில்லை என் அருமை
உன் நிறமோ கருமை
ஆனால் ஐஸ்வர்யா ராய் போல உனக்கு பெருமை ....
எனக்கோ வாழ்வில் வறுமை
அதனால் என் காதல் உனக்கு சிறுமை
இன்றும் எனக்கு இருக்கு காதலில் பொறுமை
நீயில்லாத வாழ்வு என்றும் எனக்கு வெறுமை........

Sunday, 9 October 2011
படித்ததில் பிடித்தது .......
பேசாத வார்த்தைகளைக் கூட
கவிதைகளாக்கி விடுகிறாய். . .....
என்னதான் செய்கிறாய்? என்றால்
அப்பாவியாய் சொல்கிறாய்
காதலைத் தவிர
நான் ஒன்றும் செய்யவில்லை என. .......
Monday, 3 October 2011
வாழ்க்கை எனக்கு கற்று தந்த பாடம்
வாழ்க்கை எனக்கு கற்று தந்த பாடம்
1 - எதுவுமே சில காலம் தான்
2 - எதிர் பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதில்லை
3 - உன்னை மட்டுமே வாழ்வில் நம்பு
4 - சிந்தனை செய் ஆனால் கோப படாதே
5 - வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை அதை அர்த்தம் உள்ளதாக வாழ்ந்து விடு.........
Friday, 30 September 2011
அன்பு என்பது........
அன்பு என்பது அகத்தின் தூய்மை.
அன்பு என்பது அளவிலா நேர்மை.
அன்பு என்பது அறிவினுள் கருணை.
அன்பு என்பது அளப்பரிய உரிமை.
அன்பு என்பது அனைவரின் கடமை.
அன்பு என்பது ஆற்றலின் பெருமை.
அன்பு என்பது அகிலத்தின் தாய்மை.
அன்பு என்பது ஆற்றலின் வாய்மை.
அன்பு என்பது ஆத்மாவின் ஆண்மை.
அன்பு என்பது ஆனந்தத் தூய்மை.
Wednesday, 28 September 2011
என்னை பற்றி .........
என்னை பற்றி என்னங்க சொல்ல ???? நான்தான் பில்கேட்ஸ் எண்டு சொன்னால் நம்பவா போறீங்க .....வாழ்க்கையில சிரிச்சுக்கொண்டு இருக்க கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திற ஒரு சாதாரணமான ஆளத்தான் நான் ... மதம் நம்பிக்கை இல்லை ..... அரசியல் ஆர்வம் இல்லை ...... அதாலதான் நான் சாமியாராவோ இல்லது அரசியல் வாதியாகவோ வரேல ..... காமடியா பேச ரொம்ப பிடிக்கும் ...... நட்பு என்பது வார்த்தை அல்ல .... நட்பு என் உயிர் என்று நினைக்கும் உங்கள் நண்பன் .....
கல்யாண வீடா இருந்தால் மாப்பிளையா இருக்கணும்...... செத்த வீடா இருந்தா பிணமா இருக்கணும்..... எங்கயும் மாலை எனக்குத்தான் ... இல்லாட்டி அழுவன்
கெட்டவன் என்று பெயர்டுத்த நல்லவன் ..............தப்பு யார் செய்தாலும் தப்பு என்று சொல்லுவன்...அதால யாருக்கும் என்னை பிடிக்காது ... பகிடியா பேசுவேன் .....ஆனால் அது பிரச்சனையில முடியும் ....... நல்லவனா நீங்கள் பழகினா நல்லவன் .... கெட்டவங்களா நீங்க பழகினா மகா கெட்டவன் நான் .... ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை ... ஒரு நட்பு .... ஒரே ஒரு நட்பு என்னை புரிஞ்சுகொண்டா அதுவே போதும் ..... கண்ணாடி போல யாரயும் பாப்பன் ..... நீங்கள் காட்டுற அன்பை திருப்பி காட்டுவன் ... எல்லோருக்கும் உண்மையா இருக்க ஆசைப்படுவன் ...எல்லோரும் நல்லா இருக்கணும் என்று ஆசைப்படுவன் ... ஆனால் அதுவே எனக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் ..
நடிக்கத்தெரியாத ஒருவன் ....
இதுக்கு மேல என்னை பற்றி சொல்ல எனக்கு ஒண்டும் இல்லை ..... ஏன் எண்டால் எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது ................. என்னை பார்த்த உடன பிடிக்காது ........ பார்த்து பழகின சிலவேளை பிடிக்கலாம் ....பழகினாலும் பிடிக்காமல் போகலாம்..... பிடிக்காட்டி உங்களுக்கு என்னோட நட்பு வைக்க குடுத்து வைக்கல எண்டு அர்த்தம் ஓகே......? வாங்கோ பழகுவோம் ............
முக்கியமான விஷயம் ...........
எனக்கு ஒரு அறிவான அழகான FRIEND இருக்கிறார் என்று சொல்லி என் பெருமையை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றேன்
அந்த FRIEND வேறயாரும் இல்லை .....
இதை வாசிச்சுக்கொண்டு இருக்கிற நீங்கதான் அந்த FRIEND ... ♥ ♥ ♥

Subscribe to:
Comments (Atom)